அன்பு வணக்கம்!
நான்?
“மதத்தையும் இந்த சமுதாயம் நமக்கு கற்றுத் தந்த தகவல்களையும் கடந்து, உண்மை என்னவாக தான் இருக்கும்?” என்ற கேள்வியுடன் வாழும் உங்களுள் ஒருவர்.
என் பெயர், வெண்ணிலா.
ஆன்மீகம் வாழ்வின் பல கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது, ஆனால், ஏன் அதை நமது அன்றாட வாழ்வில் நம்மால் கடைபிடிக்க முடியவில்லை? இந்த இடைவெளி எதனால் உண்டாகிறது?
இன்றைய டிஜிட்டல் உலகத்தின் இன்னல்களை ஆன்மீகத்தால் அமைதிப் படுத்த இயலுமா? அதற்கான தேடல் தான் இந்த சாமானிய மனிதரின் ‘Beyond Mind’!
உங்கள் உள்ளே அப்படி ஒரு தேடல் இருந்தால்… என்னுடன் இந்த பயணத்தில் இணைத்திடுங்கள். அடுத்து வரும் தலைமுறைக்கு பயனுள்ள பதிவுகளை இணைந்து உருவாக்குவோம்!
– ~வெண்ணிலா மகேசன் VM
